
A. ஜனாஸா சேவைகள்
எமது பணியின் பிரதான அங்கம். எமது மஹல்லாவில் ஒரு மரணம் சம்பவிக்கும் போது உடனடி ஏற்பாடுகளை முன்னெடுத்தல்.
முக்கிய செயல்பாடுகள் மற்றும் ஒழுங்குகள்
- இமாம்கள் மற்றும் பெரியார்களுடன் இணைந்து ஜனாஸா தொழுகை ஏற்பாடுகள்
- சுன்னாஹ் முறைப்படி குஸுல் (நீராட்டல்) மற்றும் கஃபன் (ஆடை அணிவித்தல்)
- இல்லம் அல்லது மருத்துவமனையிலிருந்து பள்ளிவாசல் மற்றும் மையவாடிக்கு ஜனாஸாவை எடுத்துச்செல்லல் (தொலைதூர மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து உட்பட)
- மரணம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் மையவாடி ஒழுங்குகளை முன்னெடுத்தல்
- கண்ணியமான முறையில் சரியான நேரத்தில் அடக்கம் செய்தல்





