
கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த நிதி அறிக்கைகள் மற்றும் சமூக செயற்பாட்டு அறிக்கைகள் ஊடாக நாம் வெளிப்படையான நிர்வாகத்தைப் பேணுகின்றோம்.
பதிவுசெய்யப்பட்ட சமூக நலன்புரி அமைப்பாக (பதிவு இல: DS/TH/SS/VSSO/2023/01), சங்கத்தின் அனைத்து நன்கொடைகள், மாதாந்த சந்தாக்கள் மற்றும் செலவீனங்கள் பொதுச்சபையினால் நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர்களால் பரிசீலிக்கப்பட்டு, பொதுக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு பிரதேச செயலகத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.
தணிக்கை செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகளும் நிர்வாக ஆவணங்களும் பொதுச்சபையின் ஒப்புதலுக்குப் பின் இங்கே வெளியிடப்படும்.
குளிப்பாட்டல், கபன் துணி, ஆம்புலன்ஸ் போக்குவரத்து மற்றும் அடக்க ஏற்பாடுகளுக்கான 24/7 அவசர உதவிக்கு எமது ஒருங்கிணைப்பாளரை உடனடியாக அழைக்கவும்: