
உங்கள் தர்மமும் பங்களிப்புகளும் ஏழைக் குடும்பங்களின் ஜனாஸா ஏற்பாடுகள், விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான மாதாந்த உலர் உணவு மற்றும் மையவாடி பராமரிப்பிற்கு நேரடியாகப் பயன்படுகின்றன.
நன்கொடைகளை சங்கத்தின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடலாம்:
வைப்பிலிட்ட பின்னர் அதன் ரசீதை சங்கத்தின் பொருளாளருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளவும்.
கஃபன் துணி, குஸுல் பொருட்கள் மற்றும் வசதியற்ற குடும்பங்களின் ஜனாஸா செலவுகளுக்கு உதவுதல்.
விதவைகள், முதியவர்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு அடிப்படை மற்றும் அத்தியாவசிய வாழ்வாதார உதவிகளை வழங்குதல்.
1.5 ஏக்கர் மையவாடி நிலத்தை துப்புரவாக பேணுதல், நடைபாதைகள் மற்றும் நீர் வசதிகளைப் பராமரித்தல்.
நீங்கள் புஹாரி பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த குடும்பமாயின், எமது மாதாந்த நலன்புரி அங்கத்துவத்தில் இணையலாம்.